/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! பம்பரமாக சுழன்ற வேட்பாளர்கள்
/
மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! பம்பரமாக சுழன்ற வேட்பாளர்கள்
மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! பம்பரமாக சுழன்ற வேட்பாளர்கள்
மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! பம்பரமாக சுழன்ற வேட்பாளர்கள்
ADDED : ஏப் 18, 2024 04:56 AM
கடலுார் : தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிந்த நிலையில், கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல், வேட்பாளர்கள் தங்களின் கட்சியினருடன் பேரணியாக சென்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என, மொத்தம் 19 வேட்பாளர்கள் கடலுார் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, சிதம்பரம் தொகுதியில் வி.சி., கட்சி சார்பில் திருமாவளவன். அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், பா.ஜ., சார்பில் கார்த்தியாயினி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின், காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி, தே.மு.தி.க., பிரேமலதா மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது. அதையொட்டி, கடலுார் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் பிரசாரம் பரபரப்பாக இருந்நது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் கூட்டணி கட்சியினருடன் வாகன பேரணியாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
நேற்று மாலை செண்டிமென்ட் இடத்தில், ஒவ்வொரு வேட்பாளரும் பிரசாரத்தை முடித்தனர். அதன்படி, காங்., கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வடலுாரிலும், தே.மு.தி.மு.க., வேட்பாளர் சிவக்கொழுந்து கடலுார் தேரடி தெருவிலும், பா.ம.க., வேட்பாளர் தங்கர் பச்சான் தலைமை தபால் நிலையம் அருகிலும் பிரசாரத்தை முடித்தனர். அதே போன்று, சிதம்பரம் வி.சி., வேட்பாளர் திருமாளவன் சிதம்பரம் காந்தி சிலையிலும், பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயங்கொண்டத்திலும், அ.தி.மு.க, வேட்பாளர் சந்திரகாசன், சிதம்பரம் மேல வீதியிலும் பிரசாரத்தை முடித்தனர்.
இறுதி கட்ட பிரசாரத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் கட்சியினர் வாகன பேரணி நடந்ததால், பரபரப்பாக காணப்பட்டது. மேலும், பிரசாரத்தின்போது கட்சியினருக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க, எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில், பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்கு ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

