ADDED : ஏப் 09, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் நேற்று மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு வடலுார் மாணிக்கவாசகர் திருமுறை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் திருவாசம் முற்றோதல் நடந்தது. வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், கமலம் தலைமையில், நடுவீரப்பட்டு சைவ சித்தாந்த ரத்தினம் ராஜன் வழிகாட்டுதல்படி, 25 சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசக முற்றோதல் செய்தனர்.