ADDED : ஜூலை 14, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் வெப்ப அலை வீசியதால் வெயில் அளவு 101.1 டிகிரி பதிவானது.
தமிழகத்தில் வெயில் வழக்கத்தை விட 4 டிகிரி வரையில் கூடுதாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதன்படி, பகல் பொழுதில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது.
மாவட்டத்தில், நேற்று காலை முதல் அனல் காற்று வீசியது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்தது. அதிகபட்சமாக 101.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.