/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பண்டிகையில் பட்டாசு சத்தம் குறைந்தது: விலை உயர்வு, லைசன்சு வாங்க நெருக்கடி
/
தீபாவளி பண்டிகையில் பட்டாசு சத்தம் குறைந்தது: விலை உயர்வு, லைசன்சு வாங்க நெருக்கடி
தீபாவளி பண்டிகையில் பட்டாசு சத்தம் குறைந்தது: விலை உயர்வு, லைசன்சு வாங்க நெருக்கடி
தீபாவளி பண்டிகையில் பட்டாசு சத்தம் குறைந்தது: விலை உயர்வு, லைசன்சு வாங்க நெருக்கடி
ADDED : நவ 01, 2024 06:00 AM
கடலுார்: தீபாவளி பண்டியின்போது வழக்கமாக கேட்கும் பட்டாசு வெடி சத்தம் இந்த ஆண்டுவெகுவாக குறைந்தது. கடைசி நேரத்தில் பட்டாசு விற்பனை மந்தமாக நடந்ததாக பட்டாசு விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
தீபாவளி என்பது தீப ஒளி திருநாள் என அழைக்கப்படுகிறது. வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றாலே இனிப்பு, ஜவுளிகள், பட்டாசு ஆகியவைகள் தான் நினைவுக்கு வரும். இந்த ஆண்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனல் பறக்கும் வியாபாரம் நடந்தது.
தொடர் மழையின்மையால் ஜவுளி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. இடையூறின்றி இரவு நேரங்களில் மழை பெய்ததால் வெப்பமும் இல்லாமல், அதிகளவு மழையும் இல்லாமல் இருந்ததால் பொதும க்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். அதேப்போல இனிப்பு வகைகள் தயாரிப்பாளர்கள் புற்றீசல் போல உருவாகிவிட்டனர்.
இவர்களின் தயாரிப்பு பெரிய கடைகளோடு போட்டி போடும் அளவுக்கு விலை மலிவாக கொடுக்கின்றனர். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் இனிப்பையும் வழங்கினர்.
ஆனால் பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெறுவதில் இந்த ஆண்டு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது.
விதிமுறைகள்படி கடைகள் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிக்கைக்காக மட்டும் தயார் செய்யப்பட்ட பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக விற்பனை உரிமம் கோரி கடந்த 14ம் தேதி வரை வரப்பெற்ற 130 விண்ணப்பங்களில் 61 வரை அனுமதி வழங்கப்பட்டது.
14ம் தேதிக்கு பின் 21ம் தேதி வரை உரிமம் கோரி 51 விண்ணப்பங்களின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாக தற்காலிக உரிமம் கிடைக்காதவர்கள் பட்டாசு கொள்முதல் செய்ய தயக்கம் காட்டினர். அதனால் ஏற்கனவே நிரந்த உரிமம் வைத்திருந்தவர்கள் மட்டுமே வியாபாரம் செய்தனர்.
இது ஒரு புறமிருக்க, சுற்றுச்சூழல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் விதமாக கோர்ட் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இதய நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என 125 டெசிபல் மேல் சத்தம் இருக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுபவர்கள் காவல்துறையால் வழக்குப்பதிவு
செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கைப்பட்டதால் பொதுமக்கள் பலர் பட்டாசு வாங்குவதை குறைத்துக்கொண்டனர். இதனால் தீபாவளியன்று அதிகாலை முதல் பட்டாசு சத்தம் குறைந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கூட பட்டாசு சத்தம் அவ்வளவாக கேட்கவில்லை.

