/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப் பொருளான அவலம்
ADDED : ஜூன் 23, 2025 09:22 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. இதன் மூலமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. நீர்த்தேக்க தொட்டி பழுது ஏற்பட்டதால் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் முடிந்து 3 மாதங்களாகியும் நீர்த்தேக்க தொட்டி திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே, நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.