ADDED : ஜன 02, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
வனக்காடுகளை சுற்றிபார்க்க நீண்ட நேரம் காத்திருந்து படகில் சென்றனர். படகில் செல்ல முடியாதவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி இங்கிருந்தப்படியே வனக்காடுகளை கண்டுகளித்து சென்றனர்.