/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன கோவில் முகப்பில் கொட்டகை அமைப்பு
/
நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன கோவில் முகப்பில் கொட்டகை அமைப்பு
நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன கோவில் முகப்பில் கொட்டகை அமைப்பு
நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன கோவில் முகப்பில் கொட்டகை அமைப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:44 AM

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சன விழா 23 ல் துவங்க உள்ளதையடுத்து, கீழசன்னதி கோவில் முகப்பில் கொட்டகை அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது, 10 நாள் நடைபெறும் விழாவில், தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். ஜூலை 1 ம் தேதி முக்கிய நிகழ்வான தேர்திருவிழாவும், 2 ம் தேதி ஆனிதிருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, தேர் மற்றும் தரிசன விழாவில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அதனையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் மின்னொலியல் ஜொலித்து வருகிறது. மேலும் கோவில் முகப்பில், கீழசன்னதியில் கொட்டகை போடும் பணிகளில் டபணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.