/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருநங்கை கொலையா விருதையில் பரபரப்பு
/
திருநங்கை கொலையா விருதையில் பரபரப்பு
ADDED : பிப் 19, 2025 04:52 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காப்புக்காட்டில் காயங்களுடன் இறந்து கிடந்த திருநங்கை உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி செல்லும் வழியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில், பெண் சடலம் கிடப்பதாக தகவல் பரவியது. விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்ததில், இறந்து கிடந்தது30 வயது மதிக்கத்தக்க திருநங்கை என்பது தெரிந்தது.
மேலும், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை என்பது தெரிந்தது. அவரது உடலில் கீரல்கள் இருந்தது.
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருநங்கை மர்மமான முறையில் இறந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.