/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பார்வையில் படும் வாய்க்கால்களை மட்டும் துார் வாரும் அவலம்! சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் வெள்ள அபாயம்
/
பார்வையில் படும் வாய்க்கால்களை மட்டும் துார் வாரும் அவலம்! சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் வெள்ள அபாயம்
பார்வையில் படும் வாய்க்கால்களை மட்டும் துார் வாரும் அவலம்! சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் வெள்ள அபாயம்
பார்வையில் படும் வாய்க்கால்களை மட்டும் துார் வாரும் அவலம்! சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் வெள்ள அபாயம்
ADDED : அக் 28, 2025 05:57 AM

சிதம்பரம் : டெல்டா கடைமடை பகுதிகளில் பார்வைபடும் இடங்களில் உள்ள வாய்க்கால்கள் மட்டும் துார்வாரும் பொதுப்பணி துறையினர், பல வாய்க்கால்களை கண்டு கொள்ளாததால் விவசாயம் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் விவசாயத்தை நம்பியுள்ளது. இப்பகுதியில், கீழணை, நடவாறு மற்றும் வீராணம் ஏரியின் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.
ஒவ்வொறு ஆண்டும் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால் துார் வாரப்பட வேண்டியது மிக முக்கியாக கருதப்படுகிறது. அப்போதுதான், கனமழை காலங்களில் நெல் வயலில் தேங்கும் தண்ணீர் விரைவாக வடிந்து, நெல் மணிகளை காப்பாற்ற முடியும்.
ஆனால் இந்த ஆண்டு துார் வாரும் பணிகள் தாமதமாக துவங்கப்பட்ட நிலையில், பல வாய்க்கால்கள் ் துார் வாரப்படும் முன்பே பருவ மழையும் துவங்கிவந்துது. இதனால் பல்வேறு இடங்களில், நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அதிலும், பல்வேறு பகுதிகளில் பார்வையில் படும், வாய்க்கால்களை துார் வாருவதும், கண்ணில் படாத வாய்க்கால்களை துார் வாராமல் விட்டு,விடுவதும் பொதுப்பணி துறையினரின் வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில், பல கிராமங்களின், உள் பகுதியில் உள்ள பல்வேறு பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் துார் வாரப்படாததால், நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்து வருகிறது.
உதாரணத்திற்கு, சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை பைபாஸ் அருகிலேயே செல்லும் முக்கிய வடிகால் மற்றம் பாசனம் வாய்க்கால். அந்த வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரைகள் அகற்றி சரியான முறையில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதே சயம் அதன் அருகிலேயே செல்லும் சிவகாமசுந்தரி வாயக்கால், ஆகாயத்தாமரை அகற்றப்படாமல் உள்ளது.
இந்த வாய்க்கால் மூலம் பாசனம் மட்டுமின்றி முக்கிய வடிகால் வாய்க்கால்களாகவும் உள்ளது. இதுபோன்று பல்வேறு, கிராமங்களில் கண்ணுக்கு தெரியாத உள் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் துார் வாரப்படவில்லை என்று விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
இன்னும் கடும் மழை பெய்யாத நிலையில், அவ்வப்போது, பெய்து வரும் மழைக்கே, கடைமடை பகுதிகளான, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, புதுச்சத்திரம், பு.முட்லுார், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றைய நிலையிலும், சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சூழ்ந்து, பல இடங்களில் இன்றும் தண்ணீரில் வடிந்தபாடில்லை.
ஆகவே போர்க்கால அடிப்படையில், முக்கிய பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களை, அதிகப்படியான, பொக்லைன் இயந்திரங்கள் கொண்டும், வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் ஆட்களை கொண்டு துார் வாரவும், தேவைப்படும் இடங்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

