/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணி... தீவிரம்; விரைந்து முடிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணி... தீவிரம்; விரைந்து முடிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணி... தீவிரம்; விரைந்து முடிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளாற்றில் தடுப்பு சுவர் கட்டும் பணி... தீவிரம்; விரைந்து முடிக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 25, 2025 08:13 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரூ. 17 கோடியே 98 லட்சம் மதிப்பில் வெள்ளாற்றங்கரையில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் பணியை வடகிழக்கு பருவமழைக்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் வெள்ளாறு உருவாகி சேலம், பெரம்பலுார், கடலுார் மாவட்டங்கள் வழியாக பரங்கிப்பேட்டை அருகில் உள்ள வங்கக் கடலில் கலக்கிறது. இதன் நீளம் 193 கி.மீ., ஆகும்.
சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை போன்றவைகள் இதன் துணை ஆறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே தொழுதுார், பெலாந்துறை, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுகளும், திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய், கூடலுார், செம்பேரி உட்பட பல பகுதிகளில் ஆற்றின் குறுக்கே பாசனத்திற்கு தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரங்கூர், திட்டக்குடி, திருவட்டத்துறை, பெண்ணாடம், செம்பேரி, சவுந்திரசோழபுரம், துறையூர், முருகன்குடி, டி.வி.புத்துார், கார்மாங்குடி கிராமங்களில் பாதிப்பு ஏற்படும்.
வெள்ள பாதிப்பை தடுக்க கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திட்டக்குடி, திருவட்டத்துறை, சவுந்திரசோழபுரம், செம்பேரி, டி.வி.புத்துார் உட்பட 10க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் நபார்டு நிதியில் ஆற்றங்கரையோரம் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணி துவங்கியது.
ஆனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வெள்ளக்காலங்களில் பாதிப்பு ஏற்படும் என பெண்ணாடம் பகுதி கரையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்த ஜனவரி மாதம் நீர்வளத்துறை சார்பில், நபார்டு நிதி மூலம் 17 கோடியே 98 லட்சம் மதிப்பில் சவுந்திரசோழபுரம், செம்பேரி கிராம வெள்ளாற்றங்கரையோரங்களில் மூன்று இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
3 மாதங்களில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழைக்கு முன் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.