நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காணாமல் போனது குறித்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கிரமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண்.
இவருக்கும் கடலுார் முதுநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், செப்.4ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 26ம் தேதி மாலை 5.30மணிக்கு
அப்பெண் தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் கடலுாருக்கு பொருட்கள் வாங்க பஸ்சில் வந்தார்.
கடலுார் பஸ்நிலையத்தில் இறங்கியதும், கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார்வழக்குப்பதிந்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.