/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு
/
என்.எல்.சி.,யில் இயந்திர சக்கரங்கள் திருட்டு
ADDED : அக் 02, 2025 01:55 AM
மந்தாரக்குப்பம்: நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ராட்சத இயந்திர சக்கரங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் யு.பி.சி.யார்டு பகுதியில் கடந்த மாதம் 13 ம் தேதி 10 ராட்சத இயந்திர வெண்கல இரும்பு சக்கரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு 18 லட்சம் ரூபாய் ஆகும். இது குறித்து என்.எல்.சி., அதிகாரி சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதில் இரண்டாம் சுரங்கத்தில் இரும்பு சக்கரங்களை திருடி சென்ற நெய்வேலி இந்திராநகர் கணேசன் மகன் சிவக்குமார், 37, மந்தாரக்குப்பம் மெயின் ரோடு அபூபக்கர் மகன் முகமதுேஷக், 33, ஸ்ரீமுஷ்ணம் முத்துராமலிங்கம் மகன் ஆதவன், 40 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.