ADDED : ஏப் 22, 2025 06:51 AM

பெண்ணாடம்; இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
பெண்ணாடம் அடுத்த இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு மூலவர், அம்பாளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம், 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.
மாலை 5:30 மணிக்கு பிரகாரத்தில் உள்ள பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை, 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதே போன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
சி.என்.பாளையம்: மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தேய்பிறை அஷ்டமியொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.