நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வில்வநகர் ஈஸ்வரன் கோவில் நகராட்சி துவக்கப் பள்ளியில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட பாரதிதாசன் இலக்கியமன்றத்தின் சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் எழுதும் போட்டி, ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்றத் தலைவர் கடல் நாகராஜன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் கீதா தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் வினயா வரவேற்றார். ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மனோகரன் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வருகை தந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மன்றத்தின் சார்பில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மன்ற செயலாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.