ADDED : ஜன 01, 2025 07:17 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடி வயல்வெளியில், மின் மோட்டார்களில் ஒயர்களை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி வயல்வெளி மீன்குட்டை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் மர்ம நபர்கள் மூன்று பேர் மின்மோட்டார் ஒயரை திருடினர்.
இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
அவர்கள், சிதம்பரம் அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்த செல்வரத்தினம் மகன் பிரேம்குமார், 22; ராஜாராமன் மகன் சந்தோஷ், 21; ராம்ராஜ் மகன் விக்ரம், 23; என, தெரியவந்தது.
இதுகுறித்து விவசாயி ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து, 7 ஆயிரத்து 500 மதிப்புள்ள மின் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.