/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு கூடத்தில் தீ விபத்து சமையலர் உட்பட மூவர் காயம்
/
சத்துணவு கூடத்தில் தீ விபத்து சமையலர் உட்பட மூவர் காயம்
சத்துணவு கூடத்தில் தீ விபத்து சமையலர் உட்பட மூவர் காயம்
சத்துணவு கூடத்தில் தீ விபத்து சமையலர் உட்பட மூவர் காயம்
ADDED : ஏப் 18, 2025 02:16 AM

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே சத்துணவுக் கூடத்தில் காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில், சத்துணவு பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று காலை, 11:40 மணியளவில் பள்ளி எதிரில் உள்ள சமையல் கூடத்தில் சமையல் பணி நடந்தபோது, சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரெகுலேட்டர் டியூப் பழுதாகி காஸ் கசிந்து, தீப்பிடித்து அறை முழுதும் பரவியது.
சத்துணவு பொறுப்பாளர் சரிதா, 40, உதவியாளர் ஜெயக்கொடி, 45 ஆகியோர் மீது தீ பரவியது. அவர்கள் அலறல் கேட்டு, காப்பாற்ற ஓடி வந்த ஜெயக்கொடி மகன் செந்தமிழ்ச்செல்வன், 24, மீதும் தீ பரவியது.
விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள், மூவரையும் மீட்டு, சிலிண்டர் மற்றும் அடுப்புகளை அப்புறப்படுத்தினர். பின், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூவரையும் அதிகாரிகள் சந்தித்து விசாரித்தனர்.
காலை உணவுத் திட்டத்தில் புதிதாக ஒற்றை இரும்பு அடுப்பு, சிலிண்டர்கள், ரெகுலேட்டர் வழங்கப்பட்டுள்ளன. அதில், தரமில்லாத ரெகுலேட்டர் டியூப் பழுதாகி காஸ் கசிந்து உள்ளது.
சமையல் அறையில் மேலும் நான்கு சிலிண்டர்கள் இருப்பு இருந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, அனைத்தையும் அப்புறப்படுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

