UPDATED : நவ 04, 2026 11:53 AM
ADDED : நவ 04, 2026 11:50 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் மாநகராட்சி குப்பை வண்டி கவிழ்ந்ததில் துாய்மை பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர்.
கடலுாரில் நேற்று காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அவ்வழியாக கால்நடை மருத்துவமனை அருகில் வந்த மாநகராட்சி குப்பை வண்டி, பாதாள சாக்கடை மேன் ேஹால் பள்ளம் இருப்பது தெரியாமல் சிக்கி கவிழ்ந்தது.
வண்டியில் இருந்த துாய்மை பணியாளர்கள் குப்பை வண்டியை ஓட்டி வந்த ஆலப்பாக்கம் மேனகா, ஆலப்பாக்கம் ரவி, முதுநகர் வீரம்மாள் ஆகியோர் அலறினர். அவர்களை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதுகுறித்து கடலுார் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
