/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாலையில் டீ குடிக்க சென்ற போது மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலி
/
அதிகாலையில் டீ குடிக்க சென்ற போது மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலி
அதிகாலையில் டீ குடிக்க சென்ற போது மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலி
அதிகாலையில் டீ குடிக்க சென்ற போது மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலி
UPDATED : ஆக 21, 2025 10:37 AM
ADDED : ஆக 20, 2025 11:23 PM

விருத்தாசலம்:விருத்தாசலத்தில், நள்ளிரவில் டீ குடிக்க, நண்பர்கள் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், கல்லுாரி மாணவர் உட்பட மூவர் பலியாகினர்; மூவர் படுகாயம் அடைந்தனர்.
கடலுார் மாவட்டம், எருமனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரபாண்டியன் மகன் அய்யப்பன், 19; கல்லுாரி மாணவர். கண்ணன் மகன்கள் வெங்கடேசன், 25, கவுதம், 20; பச்சமுத்து மகன் நடராஜன், 21; மணி மகன் வேல்முருகன், 21; ஆறுமுகம் மகன் ஆதினேஷ், 21.
இவர்கள் ஆறு பேரும், 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' காரில், நேற்று நள்ளிரவு தாண்டி அதிகாலை 1:00 மணிக்கு, டீ குடிப்பதற்காக, எருமனுாரில் இருந்து, மணவாளநல்லுார் அருகே உள்ள பேக்கரிக்கு சென்றனர். அங்கு கடை மூடப்பட்டிருந்ததால், சித்தலுார் பகுதியில் உள்ள கடை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வேன் டிரைவரான வெங்கடேசன் காரை ஓட்டினார். புறவழிச்சாலை பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளம் நோக்கி பாய்ந்து, மரத்தில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கி, அய்யப்பன், ஆதினேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த மற்ற நான்கு பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேல்முருகன், வழியிலேயே இறந்தார்.
கவுதம், நடராஜன், வெங்கடேசன் ஆகியோர், விருத்தாசலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.