ADDED : அக் 28, 2026 04:48 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற, மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் நேற்று (அக்.,27) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த, ரங்கநாதன் மகன் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் மகன் மணிபாலன், கோபால் மகன் தனிகாசலம் மூவரும் அரசு அனுமதியின்றி, தங்கள் வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில் பதுக்கி விற்றது தெரிந்தது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணன், 50 ; மணிபாலன், 53; தணிகாசலம், 51; முவரையும் கைது செய்து 24 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
