/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் லோக்சபா தொகுதியில் மும்முனை போட்டி! பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு 'சீட்' ஒதுக்கீடு
/
கடலுார் லோக்சபா தொகுதியில் மும்முனை போட்டி! பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு 'சீட்' ஒதுக்கீடு
கடலுார் லோக்சபா தொகுதியில் மும்முனை போட்டி! பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு 'சீட்' ஒதுக்கீடு
கடலுார் லோக்சபா தொகுதியில் மும்முனை போட்டி! பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு 'சீட்' ஒதுக்கீடு
ADDED : மார் 23, 2024 06:05 AM
கடலுார் : கடலுார் லோக் சபா தொகுதியை அ.தி.மு.க.,-தி.மு.க.,-பா.ஜ., கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளதால், தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவுகின்றது.
தமிழகத்தில் லோக் சபா தேர்தல் வரும் ஏப்.,19ம் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 27ம் தேதி முடிகிறது.
இத்தேர்தலுக்காக அ.தி.மு.க.,-தி.மு.க.,-பா.ஜ., ஆகிய அரசியல் கட்சியினரின் கூட்டணி பேச்சுவார்த்தை இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இதையடுத்து, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலுார் லோக் சபா தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கும், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,விற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடலுார் லோக் சபா தொகுதியில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.,-தி.மு.க., நேரடியாக களமிறங்காமல், கூட்டணி கட்சிகளுக்கு தாரைவார்த்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால், கடலுார் லோக் சபா தொகுதியில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் தேர்தல் ஆயத்த பணிகளில் ஈடுபடாமல் மந்தமாக உள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில், போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளராக சிவக்கொழுந்து மற்றும் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தி.மு.க., கூட்டணி பேச்சுவார்த்தையில் கடலுார் தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்து முதல் முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், மற்ற கட்சிகள் கூட்டணியை கடைசியாக இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்த நிலையிலும், காங்., கட்சியில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகவில்லை.
இது காங்., மற்றும் தி.மு.க.,வினரிடையே தேர்தல் பணியில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் லோக் சபா தொகுதியில் அ.தி.மு.க.,-தி.மு.க.,-பா.ஜ., கட்சிகளின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகின்றது.
தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மணிவாசகன் அறிவிக்கப்பட்டுளார். இவர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தவர்.
இவர் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஆசிரியர் மற்றும் வன்னியர் சமுகத்தினருக்கும் நன்கு அறிமுமானவர்.
எனவே கடலுார் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி நான்கு முனை போட்டியை ஏற்படுத்துமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

