/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி தாலுகாவாக உருவாக்கவேண்டும்: நெல்லிக்குப்பம் வர்த்தக சங்கம் தீர்மானம்

ADDED : ஜன 22, 2024 06:00 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டுமென வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரித்தால் பண்ருட்டி சட்ட மன்ற தொகுதியை கடலுார் மாவட்டத்திலேயே இணைக்க வேண்டும்.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரத்தில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால் நெல்லிக்குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வகையில் அனைத்து கட்சியினர் ஆதரவோடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அம்சா பாஸ்கரன், கலாநிதி, சேகர், ரவி, அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.