/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பின்னை வாழியம்மன் கோவிலில் இன்று செடல்
/
பின்னை வாழியம்மன் கோவிலில் இன்று செடல்
ADDED : ஜூலை 24, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; சாமியார்பேட்டை பின்னை வாழியம்மன் கோவிலில், 26வது ஆண்டு செடல் உற்சவம் இன்று நடக்கிறது.
சாமியார்பேட்டை பின்னை வாழியம்மன் கோவிலில், 26வது ஆண்டு செடல் உற்சவம் கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று (25ம் தேதி) காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம், இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை 26ம் தேதி கொடியிறக்கம், 27ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

