/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ்
/
சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ்
ADDED : மார் 21, 2024 12:08 AM

விருத்தாசலம் : பொன்னாலகரம் சுங்கச்சாவடியில் மா.கம்யூ., அறிவித்த முற்றுகை போராட்டம், அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.
விருத்தாசலம் - கடலுார் வரையில், சாலைவரி என்ற பெயரில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். நான்கு வழிச்சாலை பணி நடந்து வரும் நிலையில், சுங்கவரி வசூலிக்க கூடாது என சட்டம் இருந்தும் அதனை மீறி வசூலிப்பதை கண்டித்து பொன்னாலகரம் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் இன்று (21ம் தேதி) முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், மா.கம்யூ., வட்ட செயலாளர் அசோகன் உட்பட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர். அதில், விருத்தாசலம் அடுத்த ஊமங்கலம் முதல் பெரியாக்குறிச்சி வரை சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
குறிஞ்சிப்பாடி முதல் விருத்தாசலம் வரை இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதால், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாலை தரமாக இல்லாததால், சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதை யேற்று, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

