/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிற்சங்க கூட்டுக் குழு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்க கூட்டுக் குழு கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 24, 2025 07:12 AM

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டுக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நவநீத கண்ணன், பாட்டாளி தொழிற்சங்க மண்டல செயலாளர் ராஜதுரை வரவேற்றனர்.
மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி கண்டன உரையாற்றினார்.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாநில ஐ.ஜே.கே., பேரவை துணை செயலாளர் தெய்வசிகாமணி பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி முடிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் இளம்பரிதி, சுந்தர்ராஜன், நடராஜன், பாட்டாளி தொழிற்சங்க மண்டல தலைவர் சத்தியவேல், பொருளாளர் வெங்கடேசன், தேசிய முற்போக்கு திராவிட சங்க மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் முருகன், தங்கராசு, எஸ்.சி.,எஸ்.டி.,தொழிற்சங்க மண்டல தலைவர் மணிகண்டன், செயலாளர் ஜான்பீட்டர், அம்பேத்கர் தொழிற்சங்க மண்டல தலைவர் வெங்கடாசலம், செயலாளர் ராஜாங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.