/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து நெரிசல்: டி.எஸ்.பி., சீரமைப்பு
/
போக்குவரத்து நெரிசல்: டி.எஸ்.பி., சீரமைப்பு
ADDED : டிச 29, 2024 06:17 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் நெரிசல் ஏற்படும் வகையில் நிறுத்தியிருந்த வாகனங்களை டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர்.
விருத்தாசலம் உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.,யாக பாலகிருஷ்ணன் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவரை அரசியல் பிரமுகர்கள், சமூக நல ஆர்வலர்கள் சந்தித்து நகரில் வாகன நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாலக்கரை ரவுண்டானா, கடை வீதி, ஜங்ஷன் ரோடு பகுதிகளில் நெரிசலை ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக நிறுத்தியிருந்த வாகனங்களை ஒழுங்கு படுத்தினர்.
அப்போது, அங்குள்ள வணிக நிறுவன உரிமையாளர்களிடம், வாடிக்கையாளர்கள் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி சென்றால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர். இதனால் நகர சாலைகள் விசாலமாக காணப்பட்டது.
பின்னர், ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது என டி.எஸ்.பி., விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

