UPDATED : நவ 14, 2026 03:36 PM
ADDED : நவ 14, 2026 03:34 PM

அ நிறம் | அளவு
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய வேளாண்துறை சார்பில் இயற்கை விவசாய தொழிநுட்ப பயிற்சி முகாம் ம.புதூரில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் கீர்த்தனா தலைமை தாங்கினார். விருத்தாசலம், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சிவசங்கரன், துணை அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ் ஆனந்த் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்லமுத்து, முத்துசாமி, விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், நன்மைகள், ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
