/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு துறை தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு துவக்கம்
/
கூட்டுறவு துறை தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு துவக்கம்
கூட்டுறவு துறை தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு துவக்கம்
கூட்டுறவு துறை தேர்வுக்கு நாளை பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : செப் 02, 2025 03:34 AM
கடலுார்: தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 2025ம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்கள் பயனடையும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் நாளை 3ம் தேதி துவங்குகிறது.
பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.