/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெய்யலுாரில் விவசாயிகளுக்கு பயிற்சி
/
வெய்யலுாரில் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : அக் 30, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு:  சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் கரும்பு தோகையை மக்க வைத்து உரமாக்குவதற்காக விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி வகுப்பு நடந்தது.
விருத்தாசலம் வேளாண் அறிவியில் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அறிவியல் நிலைய பேராசிரியர் சுகுமாறன் தலைமை தாங்கினார்.
அறிவியல் நிலைய கள ஆய்வாளர் பாலமுருகன், இயற்கை விவசாயி ராமதாஸ்  முன்னிலை வகித்தனர்.
வெய்யலுார் சாவடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது பன்னீர் கரும்பு வயலில் கரும்பு தோகையை எவ்வாறு மக்க வைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி யளித்தனர். இதில் விவசாயிகள், விவசாயி தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

