UPDATED : அக் 24, 2026 01:02 AM
ADDED : அக் 24, 2026 12:59 AM

அ நிறம் | அளவு
வேப்பூர்: நல்லூர் ஒன்றிய வேளாண்துறை சார்பில் பயிர்கள் பன்முகப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.
வேப்பூர் அடுத்த மாளிகைமேட்டில் நடந்த கூட்டத்திற்கு, வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் தினேஷ் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். விருத்தாசலம், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். வேளாண் உதவி அலுவலர் ராஜசேகரன், தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் சரவணன், குமரேசன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், நெல், உளுந்து, மக்காச்சோள பயிர்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், விதை மற்றும் உரம் பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
