/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
12 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் கடலுார் கலெக்டர் உத்தரவு
/
12 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் கடலுார் கலெக்டர் உத்தரவு
12 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் கடலுார் கலெக்டர் உத்தரவு
12 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் கடலுார் கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 09, 2024 06:47 AM
பரங்கிப்பேட்டை: கடலுார் மாவட்டத்தில், 12 பி.டி.ஓ., க்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., சுதா (வட்டார ஊராட்சி), குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., (வ.ஊ) வாகவும், கீரப்பாளையம் பி.டி.ஓ., இப்ராஹிம் (கிராம ஊராட்சி), கடலுார் பி.டி.ஓ., (வ. ஊ) வாகவும், கடலுார் பி.டி.ஓ., வீரமணி (கி. ஊ), கீரப்பாளையம் பி.டி.ஓ., (கி.ஊ) வாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கீரப்பாளையம் பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் (வ. ஊ), ஸ்ரீ முஷ்ணம் பி.டி.ஓ., (கி. ஊ) வாகவும், குமராட்சி பி.டி.ஓ., ராமமூர்த்தி (வ.ஊ), ஸ்ரீ முஷ்ணம் பி.டி.ஓ., (வ.ஊ) வாகவும், ஸ்ரீ முஷ்ணம் பி.டி.ஓ., முருகன் (வ.ஊ), நல்லுார் பி.டி.ஓ., (வ.ஊ) வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நல்லுார் பி.டி.ஓ., ஜெயக்குமாரி (வ. ஊ), காட்டுமன்னார்கோவில் பி.டி.ஓ., ராஜசேகரன் (கி.ஊ), பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., (வ. ஊ) வாகவும், பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., விஜயா (வ. ஊ), கடலுார் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக பி.டி.ஓ., வாகவும் மாற்றப்பட்டனர்.
கடலுார் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக பி.டி.ஓ., சரவணன், குமராட்சி பி.டி.ஓ., (கி. ஊ) வாகவும், குமராட்சி பி.டி.ஓ., மோகன்ராஜ் (கி. ஊ), கீரப்பாளையம் பி.டி.ஓ., (வ. ஊ) வாகவும், மேல்புவனகிரி பி.டி.ஓ., சிவகுருநாதன் (வ. ஊ), குமராட்சி பி.டி.ஓ., (வ. ஊ) இடமாற்றம் செய்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

