/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை தாலுகா ஆபீசில் மரம் சாய்ந்ததால் பரபரப்பு
/
விருதை தாலுகா ஆபீசில் மரம் சாய்ந்ததால் பரபரப்பு
ADDED : மே 27, 2025 07:00 AM
விருத்தாசலம்; விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மரம் சாய்ந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம், வட்ட வழங்கல் பிரிவு, ஆதிதிராவிடர் நலன் உட்பட பல்வேறு பிரிவுகளில் பொது மக்கள் பயனடைகின்றனர். தற்போது ஜமாபந்தி முகாம் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தாலுகா அலுவலக வளாகத்தில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்த பழமையான வாகை மரம் ஒன்று நேற்று வேறுடன் முறிந்து சாய்ந்தது.
அங்கிருந்த பயனாளிகள், அலுவலர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் மரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மீது சாய்ந்து கீழே விழாமல் நின்றது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

