ADDED : மார் 23, 2025 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில், தேசிய வனநாளையொட்டி, பழஞ்சநல்லூர் தேவனபுத்துார் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் உள்ள சமுதாய கூட வளாகத்தில மரக்கன்றுகள் நடப்பட்டது.
விநாயகர் பேரரசர் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவி நித்தியா வரவேற்றார். அறக்கட்டளை இயக்குனர் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.
தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் விழாக்களில். சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கீதா, ரேவதி சரோஜா, ரங்கநாயகி, ராதா, சவுந்தர்யா, மல்லிகா, சுரேஷ் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.