ADDED : ஏப் 11, 2025 06:09 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து த.வெ.க, சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்டம் சார்பில், சிதம்பரம் காந்திசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.
இணைச் செயலாளர் புலவேந்திரன், பொருளாளர் அருண்ராஜன், துணைச் செயலாளர்கள் பாலகணபதி மற்றும் ராசாம்பாள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், தளபதி ராஜா, சிவமுகிலன், நதியா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அழகுமுத்து, அன்புராஜ், விஜய்குரு, லாரன்ஸ், ஹரிதாஸ், ராஜ்குமார், கீர்த்திவாசன், பேரூர் செயலாளர்கள் ஜீவா, வனிதா மற்றும் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் நகராட்சி மற்றும் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினர்.

