ADDED : நவ 02, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பண்ருட்டி முகமது நபி தெருவில் லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக வந்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது லாட்டரி சீட்டு விற்ற ஜவகர் தெருவை சேர்ந்த ஆறுமுகம்,62; அங்குசெட்டிப்பாளையம் சேர்ந்த ராமகிருஷ்ணன்,46; ஆகிய இருவரை பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.