ADDED : ஏப் 10, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண், இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம் பரவனாற்று பாலத்தின் கீழே, பரவனாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் பழுப்பு மற்றும் வெள்ளை நிற கட்டம் போட்ட கைலியும், நீல நிற டிஷர்ட்டும் அணிந்திருந்தார்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.