
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ஆயுதபூஜையையொட்டி கடலுாரில் ஆட்டோ டிரைவர்களுக்கு காங்., சார்பில் சீருடை வழங்கப்பட்டது.
மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கி, பஸ் ஸ்டாண்ட், அண்ணாபாலம் சிகனல், கூத்தப்பாக்கம் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார். மாவட்டத் தலைவர் கலையரசன், வழக்கறிஞர் சீனிவாசன், தொகுதி தலைவர் தர்மதுரை, கார்த்திக்கேயன், காமராஜன் ஓட்டுனர் சங்கத் தலைவர் சரத்பாபு, செயலாளர் சரத்குமார், பொருளாளர் சடகோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.