/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் தடையின்றி உணவு வழங்கல்
/
தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் தடையின்றி உணவு வழங்கல்
தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் தடையின்றி உணவு வழங்கல்
தீ விபத்து ஏற்பட்ட பள்ளியில் தடையின்றி உணவு வழங்கல்
ADDED : ஏப் 22, 2025 07:42 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே சமையல் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மாற்று நபர்கள் மூலம் தடையின்றி சத்துணவு வழங்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 17ம் தேதி மதிய சத்துணவு சமைத்தபோது, சிலிண்டரில் இருந்து அடுப்பிற்கு செல்லும் டியூப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில், சத்துணவு பொறுப்பாளர் சரிதா,40; உதவியாளர் ஜெயக்கொடி,45; இவரது மகன் செந்தமிழ்ச்செல்வன்,24; தீக்காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், காயமடைந்த பணியாளர்கள் சிகிச்சையில் இருப்பதால், விருத்தாசலம் பி.டி.ஓ., சங்கர் உத்தரவின் பேரில், தே.கோபுராபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி சத்துணவு பணியாளர்கள், செம்பளக்குறிச்சி பள்ளிக்கு கூடுதல் பணியாக வரவழைத்து, காலை உணவு மற்றும் மதிய சத்துணவு சமைத்து தடையின்றி மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.

