நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சுகுணா தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் கலைச்செல்வி, பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன் முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் பாலக்கிருஷ்ணன் வரவேற்றார்.
துணை பி.டி.ஓ.,க்கள் கணபதி, சக்திவேல், அப்துல், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் களப் பணியாளர்களுக்கு ஊதியம், கலைஞர் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்குவது, நிர்வாக செலவினங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.