மாணவர்கள் எழுதிய பிஞ்சு விரல்களில் பிரபஞ்சம் நுால் வெளியீட்டு விழா
மாணவர்கள் எழுதிய பிஞ்சு விரல்களில் பிரபஞ்சம் நுால் வெளியீட்டு விழா
UPDATED : நவ 18, 2026 03:45 PM
ADDED : நவ 18, 2026 03:40 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தமிழ் மன்றம் மற்றும் ஆணைவாரியார் அறக்கட்டளை இணைந்து மாணவர்கள் எழுதிய ‘பிஞ்சு விரல்களில் பிரபஞ்சம்’ நுால் வெளியீட்டு விழா நடந்தது.
வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தமிழ்மன்ற நிறுவனர் கவிக்குயில் ஆசிரியர் ஆணைவாரி ஆனந்தன் தலைமை தாங்கினார்.
சேத்தியாத்தோப்பு தமிழ் மன்ற நிர்வாகி ஜெயந்தி ஆனந்தன் முன்னிலை வகித்தார். புதுவை வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார், ஆணைவாரி ஆனந்தன் ஆகியோர் மாணவர்கள் எழுதிய ‘பிஞ்சு விரல்களில் பிரபஞ்சம்’ என்ற நுாலை வெளியிட ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜாவெங்கடேசன், நிர்வாக அலுவலர் லதா ் பெற்றுக்கொண்டனர்.
வடலுார் எஸ்.டி.ஈடன் பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ், சென்னை மேனுவல் மணி மெட்ரிக் பள்ளி முதல்வர் எலிசபத், சிதம்பரம் தனம் பவுண்டேஷன் நிறுவனர் மணிமாறன், சென்னை மதுரகவி மறத்தமிழன் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
குருகுலம் பள்ளி தமிழாசிரியர் நவமணி நுால்களின் தொகுப்புரையாற்றினார்.
