நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் ஆலை ரோட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொது கழிவறை உள்ளது.
இந்த கழிவறைக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் 25 நாட்களுக்கு மேலாக பழுதாகியுள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
நகராட்சி நிர்வாகம் பழுதான மோட்டாரை சீர்  செய்து கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

