/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
/
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு மா.கம்யூ., போராட்டம் அறிவிப்பு
ADDED : ஆக 29, 2025 03:03 AM

கடலுார்: இந்திய அரசு மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு செய்ததை கண்டித்து மா.கம்யூ., கட்சியினர் வரும் 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என் அறிவித்துள்ளனர்.
கடலுார் மாவட்ட மா.கம்யூ., மாவட்டக் குழுக் கூட்டம் சூரப்ப நாயக்கன்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருவரசு தலைமை தாங்கினார். நிர்வாகி அமர்நாத் வரவேற்றார். மறைந்த முன்னாள் அகில இந்திய பொதுசெயலாளர் சுதாகர்ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு கண்ணன், மாவட்ட செயலாளர் மாதவன், நிர்வாகிகள் ரமேஷ்பாபு, உதயகுமார், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ், கண்ணன், பிரகாஷ், வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில்இந்தியாவிற்கு 50சதவீதம் வரி விதித்துள்ளதை கண்டித்தும், அவற்றை திரும்பப் பெறக்கோரி வரும் 5ம் தேதி கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.மத்திய மரபணு மாற்றம் செய்த நெல் வகைகள் கொண்டு வந்துள்ளதற்கு மா.கம்யூ., வன்மையாக கண்டிக்கிறது. இவற்றை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.