/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவந்திபுரம் கோவிலில் திருப்பிரதிஷ்டை உற்சவம்
/
திருவந்திபுரம் கோவிலில் திருப்பிரதிஷ்டை உற்சவம்
ADDED : பிப் 07, 2024 11:45 PM
கடலுார்: கடலுார் அடுத்த திருவந்திபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் கோவிலில், வரும் 14 முதல் 18ம் தேதி வரை திருப்பிரதிஷ்டை நாள் (கும்பாபிேஷக நாள்) உற்சவம் நடக்கிறது.
விழாவையொட்டி, தினந்தோறும் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 3:00 மணி முதல் 7:00 மணி வரை ேஹாமம், ஸஹஸ்ரநாம அர்ச்சனை, வேதபாராயணம், திவ்யபிரபந்த சேவை சாற்றுமுறை நடக்கிறது.
வரும் 17ம் தேதி காலை 10:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 18ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.
ஏற்பாடுகளை கைங்கரிய சபை பார்த்தசாரதி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

