ADDED : டிச 07, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொண்டை அடைப்பான் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள டி.பி.டி., தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கினார்.
இதில் பண்ருட்டி நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையத்தின் சார்பில் செவிலியர்கள் கலந்துகொண்டு 5 வயது நிரம்பிய மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோரின் அனுமதியோடு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

