ADDED : செப் 02, 2025 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த எம்.புதுார் வைராயி அம்மன், தடிக்காரன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
இதையொட்டி, கடந்த 31ம் தேதி மாலை 4:00 மணிக்கு மேல், விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், முதல்கால யாக சாலை பூஜைகள் துவங்கியது. 1ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 10:30 மணியளவில் கடம் புறப்பாடாகி சுந்தரமுருகன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து சென்று, கும்பாபிேஷகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம், தீபாராதனை நடந்தது.