ADDED : டிச 27, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் பா.ஜ., சார்பில் வாஜ்பாய் 100 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் சட்டசபை தொகுதி சார்பில் நடந்த விழாவிற்கு ஏழுமலை தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முன்னிலை வகித்தார். நகர தலைவர் குமார் வரவேற்றார். தெற்கு ஒன்றிய தலைவர் பக்ரீதன், வடக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ், சுபாஷ், ஸ்ரீதர், ஆடிட்டர் விஸ்வநாதன், ரமேஷ், பாலசுப்ரமணியம் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்வில், வாஜ்பாய் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது.

