/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.ஏ.ஓ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வி.ஏ.ஓ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 07, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் கண்டன உரையாற்றினர்.
மத்திய அரசின் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணிப்பது. வருவாய் நிர்வாக ஆணையரின் ஊழியர் விரோத போக்கை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.