/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 05, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த வேளம்பூண்டி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வேளம்பூண்டி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. 2ம் கால யாக சாலையும், 4ம் தேதி, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
நேற்று காலை, புனித நீர் அடங்கிய கலசங்கள் வேத விற்பனர்களால் எடுத்து வரப்பட்டு கோவில் கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கருணாநிதி, அறங்காவலர்கள் மகேஸ்வரி ஜெயராமன், ரமேஷ், கல்யாணசுந்தரம் செய்திருந்தனர்.