ADDED : செப் 27, 2024 05:36 AM

கடலுார்: குறிஞ்சிப்பாடி வி.சி., கட்சியின் செயற்குழு கூட்டம் குள்ளஞ்சாவடியில் நடந்தது.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். குள்ளஞ்சாவடி நகர செயலாளர் அம்பேத் வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி, மத்திய ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், கடலுார் மண்டல செயலாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினர். மாநில துணைச் செயலாளர் ஜான்சன், மாவட்டத் துணை அமைப்பாளர் சின்ராஜ், நிர்வாகிகள் உட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் அக்டோபர் 2ம் தேதி உளுந்துார்பேட்டையில் நடக்கும் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி பகுதிகளிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

