ADDED : ஆக 20, 2025 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ராஜதுரை வரவேற்றார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஸ்ரீதர், சக்திவேல், பழனிவேல், நாகவேந்தன், ஆறுமுகம், சம்பத், கிட்டு, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா பேனர்களை போலீசார் அகற்றியதை கண்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.