ADDED : அக் 15, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை அவமதித்ததைக் கண்டித்து வி.சி.,கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ் ஒளி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் மனவாளன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர்கள் ஆதிமூலம், பாவணன் வரவே ற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னிய அரசு, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல செயலாளர் சௌதி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.